காமெடி பாதி.. காமம் பாதி : அந்த விஷயத்தால் மார்க்கெட்டை இழந்த பிரபல நகைச்சுவை நடிகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2022, 1:52 pm

பொதுவாகவே சினிமாவில் நுழைந்து வெற்றி பெறுவது சுலபமான காரியம் அல்ல. திறமை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

இதையறிந்த எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் தங்கள் திறமைகளை அறிந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். அதுவும் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வருவது மிக மிக கடினமே.

எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் தற்போது சினிமாவில் ஜொலிக்க முடியாமல் பினவாங்கியுள்ளனர். அந்த வரிசையில் வந்த ஒரு மிகப்பெரிய பிரபல நடிகர் ஒருவர், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி நகைச்சுவை நடிகர் என அந்தஸ்துக்கு வந்தவர்.

தமிழ் சினிமாவில் தன்னிகரில்லா ஒரு தனி நகைச்சுவை பாணியை உருவாக்கியவர். இதனால் தமிழ் சினிமாவின் புகழின் உச்சிக்கு சென்றார். பட வாய்ப்புகளும் குவிந்தது. ஒரே வருடத்தில் இவருடைய 25 படங்கள் வெளியாகி ஆச்சரிப்படுத்தின.

ஆனால் உடன் நடிக்கும் நடிகைகளிடம் இவரின் தகாத கண்ணோட்டத்தால் இவரின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டு ஒதுக்கியது.

அது என்னமோ, நகைச்சுவை நடிகர்கள் எத்தனை படத்தில் நடித்தாலும், கண்டிப்பாக ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்து விடுகிறது.
அப்படித்தான் இவருக்கும் எழுந்தது.

பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வந்த அவருக்கு இந்த ஆசையும் வந்தது. உடனே தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களிடம் ஆசையை கூற, உடனே அவர்களும் ஓகே சொல்ல, தனக்கு பிடித்த நடிகைகளை தான் அவர் தேர்வு செய்து கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார்.

முதல் படம் அதிரிபுதிரி ஹிட் ஆனது. இதனால் செல்வாக்கு உயர்ந்தது. இதன் பின்னர் காமெடியனாகவே வலம் வந்த நடிகர், பின்னர் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு எடுக்கப்பட்டது இரண்டாது படம்.

அந்த படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையை நடிக்க வைக்க போராடினார் இந்த நகைச்சுவை நடிகர். அதுவும் ஒரு பாட்டுக்கு.. இதையறிந்த நடிகை 50 லட்சம் சம்பளம் கேட்டிருக்கிறார்.

ஒரு பக்கம் நடிகையின் சக சினிமா நண்பர்கள் அவர் படத்தில் நடிக்க வேண்டாம், அது உங்க கேரியருக்கு ஆபத்து என கூறியும், நடிகை கேட்கவில்லை.

நகைச்சுவை நடிகரும் 50 லட்சம் ரூபாய் சம்பளம் தர சம்மதித்ததும், ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். அந்த நடிகைக்காக எதுவும் செய்யதயாராக இருந்தார் நம்ம நகைச்சுவை நடிகர். அவ்வளவுதான் அந்த நடிகை தற்போது சினிமாவில் காணாமல் போய்விட்டார்.

படமும் ஓடவில்லை. அதன் பின் அந்த நடிகரும் ஹீரோவாக நடிக்க தயாரிப்பாளர் முன் வராததால் வேறு வழியின்றி தனது பழைய பாணியில் காமெடியானாக வலம் வந்தார். ஆனால் ஆசை முடிந்துவிட்டதா என்ன, மீண்டும் தனக்கு புது தயாரிப்பாளரும், இயக்குநரும் கிடைக்க அடுத்த ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார். தான் விரும்பிய ஒல்லி நடிகையை அந்த படத்தில் களமிறக்க யோசித்தார்.

அவரும் ஓகே சொல்ல, அந்த படத்தில் நடித்தார் .படமும் தோல்வி, நடிகையும் காலி. துண்ட காணோம் என்று தனது சொந்த ஊருக்கே சென்ற அந்த நடிகை இதுவரைக்கும் பட வாய்ப்பில்லாமல் வயதானதுதான் மிச்சம்.

அதே போல காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகையை தனது வளையத்திற்குள் போட நினைத்தார் அந்த நகைச்சுவை நடிகர். அந்த நடிகையின் மார்க்கெட் டவுன் ஆக, இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திய நகைச்சுவை நடிகர், நடிகை அடமானம் வைத்த சொத்தை வாங்கி கொடுத்து, தங்களின் தீவிர ரசிகன் நான், என் படத்தில் நடிங்க என கூறியுள்ளார். அப்போது அந்த நடிகைக்கு பட வாய்ப்பு இல்லையென்பதால் உடனே ஒப்புக்கொண்டார்.

அப்போதும் சக நண்பர்கள், அந்த நடிகையிடம் காமெடி நடிகருடன் சகவாசம் வேண்டாம் என கூற, அவர் வேறுவழியின்றி நடிக்கத் தொடங்கினார். ஆசைக்கு இணங்கவும் செய்தார். காமெடி நடிகரின் ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டுக்கு அடிக்கடி நடிகைகள் வந்து போக துவங்கினர்.

இந்த லிஸ்டில் இன்னும் நிறைய நடிகைகள் உள்ளனர். இப்படி தனக்கு பிடித்த நடிகைகளை நடிக்க வைத்தே அவர்கள் பிழைப்பில் மண்ணள்ளி போட்டவர்தான் அந்த நகைச்சுவை நடிகர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 721

    0

    0