மேடையில் இருந்து சுருண்டு விழுந்த பிரபல பாடகர் : பாதியில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி.. பரபரப்பு வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2023, 2:46 pm

இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போது பிரபல பாடகர் மேடையில் சரிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடர்களில் ஒருவர் பென்னி தயாள். தமிழில் பாபா படம் மூலம் அறிமுகமான இவர், விஜய், அஜித், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு பாடலை பாடியுள்ளார்.

20 வருடங்களாக பாடலை பாடி வரும் பென்னி தயாள், ஒரு இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போது மேடையில் இருந்து சரிந்து விழுந்தார்.

என்ன நடந்தது என்று தெரியாமல் பார்வையாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சென்னை விஐடி கல்லூரி அரங்கில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது பல பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்.

அப்போது காதலன் படத்தில் வரும் ஊர்வசி ஊர்வசி பாடலை உற்சாகமாக பாடிக்கொண்டிருந்தார். பார்வையாளர்கள் நடனமாடிக் கொண்டே ரசித்திருந்தனர்.

அப்போது அங்கே பறந்தபடி படம் பிடித்துக்கொண்டிருந்த ட்ரோன் மேகரா சட்டென பென்னி தயாள் பின் தலைப் பகுதியில் அடித்தது.

இதை எதிர்பாராத, பென்னி தயாள், உடனே கீழே அமர்ந்துவிட்டார். என்ன நடந்தது என தெரியாமல் உடனே பாதுகாவலர்கள் அவரை மேடையில் இருந்து அழைத்து சென்றுவிட்டனர், நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது.

தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஒய்வெடுக்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ட்ரோன் பறந்து பென்னி தயாள் மீது விழுந்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்