நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு முன்னர் நெல்சன் கோலமாவு கோகிலா, பீஸ்ட் , டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் வைத்து படம் எடுப்பதால் எல்லோரது பார்வையும் நெல்சன் மீதே இருந்தது.
இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். பான் இந்தியா படமாக வெளியாகி இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது.
ஆனால் நெல்சன் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் தோல்வியடைந்ததால் அதை வேண்டுமென்றே செய்ததாக ரஜினி ரசிகர்கள் நெல்சனை திட்டி தீர்த்து பகையாளியாக பார்க்க துவங்கினார்கள். ஆனால் ஜெயிலர் வெற்றிக்கு முழு முழுக்க விஜய் தான் காரணமாம். ஆம், நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது தான் ரஜினிக்கு கதை சொல்ல நெல்சனை ஊக்குவித்து அனுப்பினராம் விஜய். எனவே அவர்கள் இருவரும் எந்த போட்டி பொறாமையும் இல்லாமல் தான் இருக்கிறார்கள் இதற்கிடையில் ரசிகர்கள் தான் வீண் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.
இந்நிலையில் உண்மை என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. பீஸ்ட் தோல்விக்கு ரஜினியோ, விஜய்யோ காரணமில்லை என்கிறார்கள். முழு தோல்விக்கும் தயாரிப்பாளர் தான் காரணமாம். அந்த சமயத்தில் கேஜிஎப் திரைப்படம் வெளியானது. எனவே பீஸ்ட் படத்தை வெளியிட வேண்டாம் என இயக்குனர் சொல்லியும் தயாரிப்பு நிறுவனம் தான் வெளியிட்டே ஆகவேண்டும் என நிபந்தனை விதித்ததாம்.
எனவே தனில் நெருக்கடியில் அவசவசரமாக படத்தை முடித்து வெளியிடவேண்டியதாக இருந்ததாம். அதனால் தான் படம் தோல்வி அடைந்ததாக சன் பிச்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் கூறியுள்ளார். எனவே பீஸ்ட் படத்தின் தோல்விக்கு விஜய்யோ நெல்சனோ காரணமில்லையாம் கலாநிதி மாறன் தான் காரணமாம். இனிமேலாவது நெல்சனை திட்டுவதை நிறுத்துங்கப்பா விஜய் பேன்ஸ் என கேட்டுக்கொண்டுள்ளனர் நெட்டிசன்ஸ்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.