நயன்தாராவின் செருப்பை திருடிய இயக்குனர்… இவ்வளவு மட்டமாவா? கணவர் விக்கியின் ரியாக்ஷ்ன்!

Author: Shree
13 April 2023, 5:05 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வடை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. இதனிடையே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருமே வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும், தொழில் ரீதியான சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் கோவில் , பரிகாரம் என செய்து வருகிறார்கள். நயன்தாரா தற்போது ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் நடத்திய விருது விழா ஒன்றில் நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். அப்போது மேசையில் விருது வாங்கி நன்றி உறையாற்றிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார், கடந்த ஆண்டு கோலமாவுக்கு விருது வாங்கும் போது நயன்தாராவுக்கு நன்றி கூற ஆசைப்பட்டேன் ஆனால் அவர் அந்த விழாவில் இல்லை. இந்த விருது விழாவிற்கு அவர் வந்து கிளம்ப போவதாக என்னிடம் முன்பே கூறினார். அதனால் நான் நயன்தாராவின் செருப்பை திருடி மறச்சு வச்சிட்டு தான் மேடைக்கு வந்துள்ளேன். என கூறி சிரித்துக்கொண்டே நயன்தாராவுக்கு நன்றி சொன்னார். சிலமாதங்களுக்கு முன்னர் வெளியான இந்த வீடியோ தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/shorts/t91n4qpsohw
  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 552

    3

    0