இயக்குனரிடம் கெஞ்சி நடிக்க வைத்த தந்தை… பிளாக்பஸ்டர் ஹிட்டான விஜய் படம்!
Author: Selvan14 November 2024, 4:05 pm
திருப்பு முனையாக அமைந்த துப்பாக்கி
நடிகர் விஜய்,சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் துப்பாக்கி.கிட்டத்தட்ட 12 வருடம் கடந்து ரசிகர்கள் மத்தியில் இப்போதும் இத்திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

விலகிய அக்சய் குமார்
ஏ.ஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தில் விஜய் நடிக்க வைப்பதாக இல்லை என்று ஒரு பேட்டில் தெரிவித்திருப்பார். பாலிவுட் நடிகர் அக்சய்குமாரிடம் தான் முதலில் துப்பாக்கி கதையை சொன்னேன்.அவர் கதையை கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் அக்சய் குமார் அப்போது நிறைய படங்களில் நடித்து வந்ததால் துப்பாக்கி படத்தை எடுக்க தாமதம் ஆகி கொண்டே இருந்தது.
இதையும் படியுங்க: காதல் ஆசை யாரை விட்டது..ட்ரெண்ட் ஆகும் சமந்தா வீடியோ..யார் அந்த நபர்?
வாய்ப்பு கேட்ட விஜய் அப்பா
அந்த சமயத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திர சேகர் போன் செய்து,மணிரத்னம் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது.இதனால் உங்களிடம் ஏதாவது இப்போ கைவச கதை இருக்கா என்று கேக்க… இருங்க சார் கொஞ்ச நேரத்தில கூப்பிடறனு… போன் கட் செய்து விட்டு,அக்சய் குமாரிடம் ஏ.ஆர் முருகதாஸ்… “சார் படம் தாமதமாகிறது” அதனால் முதலில் நான் இதை தமிழில் எடுக்கிறேன் என்று சொல்ல அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.
உடனே துப்பாக்கி கதையை விஜயிடம் சொல்லி ஷூட்டிங் வேலையை ஆரம்பித்தார்.
விஜய் செய்த உதவி
இப்படத்தில் ஒரு பாடலுக்கு படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு அதற்கான செலவு 80 லட்சத்தை ஒதுக்கி வைத்தார் தயாரிப்பாளர் தாணு.கடைசியில் 1 கோடியே40 லட்சம் செலவாக தயாரிப்பாளர் தாணு ஷாக் ஆனார். இந்த விஷயம் நடிகர் விஜய் காதுக்கு செல்ல 65 லட்சம் காசோலையை உதவியாளர் ராமுவிடம் கொடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு வழியாக படம் வெற்றிகரமாக எடுத்து முடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.