2வது திருமணத்துக்கு முட்டுக்கட்டை போட்ட அப்பா.. நடிகையை கழட்டி விட்ட பிரபல நடிகர் : வெளியான தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2023, 6:31 pm

அவர் அவர் துறையை சார்ந்த இருபாலினத்தினர் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் கதையை நாம் அனைவரும் அறிந்திருப்போம் அந்த வகையில் சினிமா துறையை சார்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றும் பொழுது காதலில் விழுவதும் அதைப் பற்றி கிசு கிசுக்கள் வருவதும் வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில் பிரபுவிற்கும் குஷ்பூவிற்கும் காதல் மலர்ந்ததாக சினிமா பிரபலம் பயில்வான் ரங்கநாதன் சினிமா யூடூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

90’ஸ் காலங்களில் உச்சத்தில் இருந்த நடிகர் பிரபு மற்றும் குஷ்பூ சின்னத் தம்பி போன்ற பல படங்களில் ஒன்றாக நடித்து வந்தனர். சினிமாவிலும் சரி வெளியவும் சரி இவர்கள் ஜோடிப் பொருத்தம் அருமையாக இருக்கிறதென அந்த காலத்து ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் இவர்கள் இருவரும் நெருங்கி பழகுவதாகவும் இவர்களுக்குள் காதல் இருக்கலாம் எனவும் கிசு கிசுக்கள் வெளிவந்தன.

சமீபத்தில் பயில்வான் ரங்கநாதவன் அவர்களை பேட்டி எடுக்கும் பொழுது இதைப் பற்றி கேட்கையில் அது கிசு கிசு அல்ல பிரபுவும் குஷ்பூவும் காதலித்து வந்தது உண்மை தான்.

ஆனால் பிரபுவின் தந்தை சிவாஜி கணேஷன் குஷ்பூவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க தயங்கியதால் இருவரும் பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிரபு குஷ்பூவை காதலிக்கும் முன்னரே பிரபுவிற்கு திருமணம் ஆனதால் தான் சிவாஜி கணேஷன் இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் பிரபு குஷ்புவும் திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கு சிவாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 4 மாதங்களில் தங்களது உறவை இருவரும் முறித்துக்கொண்டதாகவும் விக்கிப்பீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்துகொண்ட குஷ்பூவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பிரபு புனிதா தம்பதியினருக்கு விக்ரம் பிரபு என்ற மகன் உள்ளார். விக்ரம் பிரபு கும்கி, வெள்ளக்கார துரை, சிகரம் தோடு போன்ற தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!