ரஜினியை உருகி உருகி காதலித்த பெண்… சூப்பர் ஸ்டாராக உச்சம் தொட காரணமாக இருந்ததே இவங்கதான்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 2:01 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினி. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

ரஜினிகாந்தின் நண்பரும் பிரபல மலையாள திரையுலகின் இயக்குனர், நடிகருமான ஸ்ரீவாசன், ரஜினியின் முதல் காதல் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

முதலில் ரஜினிகாந்த் பேருந்து நடத்துநராக இருந்தது அனைவரும் அறிந்ததே.. அப்படி, ரஜினிகாந்த் கண்டெக்டராக இருந்தபோது பேருந்தில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க துவங்கியுள்ளனர். இதன்பின், ஒரு நாள் என்னுடைய நாடகம் நடக்கிறது வந்து நாடகத்தை பார் என்று அந்த பெண்ணை ரஜினிகாந்த் அழைத்துள்ளார்.

நாடகத்தில் ரஜினியின் நடிப்பை கண்டபின் அந்த பெண் வியந்து போயுள்ளார். இதன்பின் ஒரு பிலிம் இன்ஸ்ட்யூட் ஒன்றில் ரஜினியை சேரச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.

அந்த பெண் கொடுத்த தைரியத்தில் ரஜினி பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேர்ந்தார். ஆனால், பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேருவதற்கு, பணத்துக்காக எங்கே செல்வது என்று ரஜினி திகைத்துப்போய் நின்றபொழுது, அந்த பெண் தான் ரஜினிக்கு பணம் கொடுத்து உதவினார்.

ஆனால், திடீரென ஒரு நாள் அந்த பெண் ரஜினியின் வாழ்க்கையில் இருந்து காணாமல் போய்விட்டார். ரஜினிகாந்த் கதறி அழுதார்.

நான் வாழ்வதற்கு ஒரே காரணம் அந்த பெண்ணை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதற்காக தான் என்று ரஜினி கூறினார் ” என இவ்வாறு ஸ்ரீவாசன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ரஜினியின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் கதை இருக்கிறதா, அந்த பெண்தான் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆக காரணம் என ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.

  • Jyothika Supports Suriya விஜய் தான் BEST..சூர்யா WORST.. ரசிகருக்கு ஜோதிகா சுடச் சுட பதிலடி.!