உருப்படவே மாட்ட.. பிரதீப் ரங்கநாதனை பச்சை பச்சையாக திட்டிய பெண்.. ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2025, 12:38 pm
நடிகர் பிரதீப் ரங்கநாதன், சமீபத்தில் நடைபெற்ற டிராகன் படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில், தனக்கும் ஹேட்டர்கள் இருப்பதாகவும், சிலர் தன்னை காலி செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த கருத்து, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் கலாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. “ஒரே ஒரு படம் நடிச்சதுக்கு இவ்வளவு ஓவரா?” என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
அடுத்த வாரம் வெளியாக உள்ள டிராகன் படத்தில் இருந்து இளைஞர்கள் எதை கற்றுக்கொள்ளலாம் என்ற கேள்வியும் எழுகிறது. “48 அரியர் வைத்தவன் கூட வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறான், நான் முன்னேற மாட்டேனா என்று யாரும் நினைத்தால், சத்தியமா முடியாது” என பிரதீப்பை பெண் ஒருவர் சரமாரியாக திட்டியுள்ளார்.
மேலும் தறுதலை, பொறம்போக்கு போன்ற இளைஞர்களை ஊக்குவிப்பதாக படம் எடுத்து வருகிறார் என குற்றம்சாட்டியுள்ளார். இதனை எதிர்த்தும் ஆதரித்தும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் டான் படமும் இதே போன்று விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. சிலர், தனுஷ் ரசிகர்களுக்கே பிரதீப் மற்றும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்கவில்லை என குற்றம்சாட்ட, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரெய்லர் குறித்து ஏன் அந்த பெண் பேசவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.
She’s 100% true! 🤯🤯🤯 pic.twitter.com/JKQW0K8S2B
— Sid 🚀Maxxx (@SidTweep) February 14, 2025
எவ்வளவு விமர்சனமாக இருந்தாலும், நாகரீகமான முறையில் தெரிவிக்க வேண்டும்; அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், விமர்சிப்பவரின் தரமும் குறையும் என்பதே நெட்டிசன்களின் கருத்து.