தினமும் திரிஷாவுக்கு தடபுடலா சாப்பாடு அனுப்பும் ஹீரோ… யாருன்னு பாருங்க!

Author:
13 August 2024, 8:08 pm

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான திரிஷா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகை ஆவதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு “மிஸ் சென்னை” போட்டியில் பட்டம் பெற்றிருக்கிறார். அதன் பிறகு திரிஷாவுக்கு திரைப்படங்களில் இருந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்க துவங்கியது.

ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று திரிஷா நடித்திருந்தார். அதை அடுத்து மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, ஆயுத எழுத்து, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் திரிஷா.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரம் நடித்து எல்லோரும். ரசனைக்கும் உள்ளாகி இருந்தார். இதனிடையே பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகை திரிஷா தற்போது விஜய்யுடன் கோட் திரைப்படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போடுகிறார். மேலும் அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் கமல்ஹாசனின் தக்லைஃப் திரைப்படத்திலும் நடித்த வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக “விஸ்வாம்பரா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் நடிகை திரிஷா தனக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீட்டில் இருந்து தினமும் உணவு அனுப்புகிறார் என கூறி வகை வகையான சாப்பாடு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

The hero who sends food to Trisha every day look who

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!
  • Close menu