ஏப்.,29ல் ஓடிடியில் வெளியாகும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’… சர்ச்சைகளுக்கு பிறகும் பல மொழிகளில் ரிலீசாகிறது..!!

Author: Babu Lakshmanan
18 April 2022, 6:50 pm

கடந்த மார்ச் 11ம் தேதி ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்தி திரைப்படம் வெளியானது. காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீரில் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கொல்லப்பட்டதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

இந்தப் படத்தில் நடித்த அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோரை அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், எதிர்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். மேலும், இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Image

திரையரங்கில் ஹிட் அடித்த ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 29ம் தேதி ZEE5 ஓடிடியில் வெளியாகிறது. தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்படுகிறது.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?