விஜய்யை அடித்து துவைத்த கூர்க்கா.. அந்த காரணத்திற்காக விரட்டியடித்த மறைந்த நடிகை..!
Author: Vignesh1 June 2023, 6:00 pm
நடிகர் விஜய் கமர்ஷியல் கிங்க்காக தென்னிந்திய தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் லியோ என்ற திரைப்படத்தில் லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், லியோ திரைப்படமும் வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மறைந்த நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா நடிகர் விஜய்யை ஆரம்ப காலகட்டத்தில், காவலாளியை வைத்து விரட்டிவிட்ட சம்பவம் நடந்ததாக தமிழா தமிழா பாண்டியன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
மேலும், அப்போது கொடநாடு எஸ்டேட்டுக்குள் செயற்கை அருவி, அருவியை ஒட்டி இருக்கும் சின்ன ஏரிக்கு மன அழுத்தத்தை குறைக்க ஜெயலலிதா அங்கு செல்வார் என்றும், 60 வயதை கடந்தவர் என்றாலும் போட்டிங் செல்ல விருப்பமுள்ளவர் ஜெயலலிதா.
மேலும், அங்கு வேலை பார்க்கும் தொழிலாளிகளுடம் மிகவும் எளிமையுடம் பேசுவார் என்றும், ஒரு சமயத்தில், நடிகர் விஜய், ஜெயலலிதாவை சந்திக்க அப்பாய்மெண்ட் இல்லாமல் சந்திக்கலாம் என்று நினைத்து சென்று இருந்தநிலையில், விஜய்யை அப்பாய்மெண்ட் இல்லாமல் சந்திக்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும், உடனே கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஓம் பகதூர் என்ற காவலாளியை வைத்து விரட்டி இருக்கிறார். கோடிக்கணக்கில், சம்பளம் வாங்கும் விஜய்யை 15 ஆயிரம் சம்பளம் வாங்கும் நேபாளி கூர்காவால் விரட்டியடிக்கப்பட்டார் என்று தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.