எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர் : விஜய் டிவி நடிகரை இழுத்த சன் டிவி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 12:54 pm

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று, யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரத்தில் புது சாதனையை செய்திருக்கிறது.

இதுவரைக்கும் முதல் இடத்தில் இருந்து வந்த ரோஜா சீரியலின் டி ஆர் பி யில் 8% மட்டுமே குறைவான நிலையில் இரண்டாவது இடத்தில் இந்த சீரியல் வந்துவிட்டது. எதிர்நீச்சல் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றது, இந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றி தான். கிராமப்புறங்களில் விடவும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை அதற்கு முன்பாக கொண்டு வர வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரோஜா சீரியல் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வந்த நிலையில் அந்த சீரியல் முடிவடைந்தால் அந்த இடத்திற்கு ஒன்பது மணிக்கு இது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நாச்சியப்பன் கேரக்டராக நடிக்கும் நடிகர் சௌமியன் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. இதை குறித்து அதிகாரப்பூர்வமாக சௌமியன் எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.

ஜனனியின் அப்பாவாக சௌமியன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பொதுவாக நடிக்கும் அனைத்து கேரக்டர்களுமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விடும். அந்த மாதிரி தான் நாச்சியப்பன் கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆரம்பத்தில் சௌமியன் ஒரு புகைப்படக் கலைஞர் ஆக இருந்து பல பங்க்ஷன்களில் மட்டுமல்லாமல் திருமண வீடுகளிலும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார் .

அதற்குப் பிறகு ஒரு ஒரு திரைப்படத்தையும் இவர் தயாரித்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் ரம்பா மற்றும் லிவிங்ஸ்டன் நடித்த சுந்தர புருஷன் திரைப்படத்தில் ரம்பாவின் மாப்பிள்ளையாக இவர் நடித்துள்ளார்.

மேலும் ரஜினி நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியின் தங்கையின் கணவராகவும் இவர் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியலில் ஒரு கண்டிப்பான தந்தையாக நடித்த வந்த அவர், திடீரென இந்த சீரியலில் இருந்து விலக இருக்கிறாராம்.
அவரை தொடர்ந்து இந்த சீரியலில் இனி நாச்சியப்பனாக பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அப்பாவாக நடிக்கும் நடிகர் தான் அறிமுக போவதாக போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது.

இதைக் குறித்து இன்னும் சீரியல் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!