உன் விசுவாசம் போதும்டா சாமி நீ கிளம்பு… சூர்யா குடும்பத்துக்கே சூனியம் வைத்த நபர்!

Author: Rajesh
20 December 2023, 8:04 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

jyothika surya

இவர்கள் ஒருவரும் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த பொது காதலித்து வந்தார்கள். அந்த படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் உண்மையாகவே ரொமான்ஸ் செய்து வேற லெவல் கெமிஸ்ட்ரி கொடுத்தனர்.திருமணம், குழந்தைகள் என ஆனதும் ஜோதிகா நடிப்பில் இருந்து விலகி பின்னர் மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து கலக்கி வருகிறார். கடைசியாக அவர் நடித்த காதல் தி கோர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக கலெக்ஷ்ன்ஸ் அள்ளியது.

இதனிடையே சூர்யா திடீரென தனது பெற்றோர்களை தனியாக தவிக்கவிட்டு மனைவி, பிள்ளைகளோடு மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இந்த பிரச்சனை ஜோதிகாவால் தான் வந்தது என்றும், ஜோதிகா குடும்பத்தையே பிரித்து சுக்குநூறாக்கி தனிக்குடித்தனம் சென்றுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த குடும்ப விஷயங்கள் அனைத்தையும் ஒன்றும் பாதியுமாக கசியவிட்டது சூர்யாவின் நம்பிக்கைக்குரிய நபரான அவரது மேனேஜர் தங்கதுரை தானாம். ஆம், அவர் தான் இல்லாததும் பொல்லாததுமாக மீடியாவில் குடும்ப பிரச்சனைகளை கூறி ஒட்டுமொத்த சிவகுமார் குடும்பத்தின் நம்பிக்கையே உடைத்துவிட்டாராம். இதனால் சூர்யா இனி உன் சவகாசமே வேண்டாம் சாமி…. நீ வேலை பார்த்தது போதும் கிளம்பு என கூறி துரத்திவிட்டாராம்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!