இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை… நயன்தாரா லிஸ்டிலே இல்லை!

Author: Rajesh
14 December 2023, 8:43 am

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதாலோ, கவர்ச்சியான ரோல்களில் தாராளம் காட்டுவதாலோ நடிகைகள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடமுடியாது. நடிகை என்பதையும் தாண்டி நல்ல மனிதாபமுள்ள மனுஷியாக இருக்கவேண்டும். பாமர மக்களுடன் சகஜமாக பேசி பழவேண்டும். உதவி என்றதும் அள்ளிக்கொடுக்கவேண்டும் இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அந்தவகையில் இந்த ஆண்டு ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்திருக்கும் நடிகைகள் லிஸ்ட் வெளியாகி வியப்பளித்துள்ளது. அதிகம் சம்பளம் வாங்கிக்கொண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் நயன்தாராவையே பின்னுக்கு தள்ளியுள்ளார் நடிகை திரிஷா. ஆம், 2023ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் லிஸ்டில் திரிஷா தான் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

trisha - updatenews360 1

பொன்னியின் செல்வன், லியோ உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த ஆண்டு அவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் பார்ப்பதற்கு அதே இளமையோடு ரசிகர்களை வசீகரிப்பது தான் ப்ளஸ் பாயிண்ட்.

Tamannaah -updatenews360

திரிஷாவுக்கு அடுத்ததாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் லிஸ்டில் தமன்னா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவதாக தான் நயன்தாரா இருக்கிறார். இதனால் திரிஷாவுக்கு அடுத்த சில நாட்கள் மார்க்கெட் ஓஹோன்னு ஓடும் என எதிர்பார்க்கலாம்.

  • Pawan Kalyan Hindi Controversy இந்தியில் டப் செய்வாங்களா..ஆனால் இந்தி வேண்டாமா..பவன் கல்யாண் விளாசல்.!