சிம்பு தட்டி கேட்கணும்… படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தினரை விரட்டிய திரையரங்கம் – வைரல் வீடியோ!

Author: Shree
30 March 2023, 10:57 am

சிம்பு நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பத்து தல. கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்நடித்துள்ளனர். மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சிம்பு ஏஜிஆர் என்கிற டான் கேரக்டரில் நடித்துள்ளார்.

தமிழகம் முழுக்க சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு ரசிகர்கள் இப்படத்தை மாபெரும் ஹிட் படமாக்கவேண்டும் என்பதற்காக காலையிலேயே தியேட்டர் முன் குவிந்து பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து , மேள தாளகளுடன் இப்படத்தின் ரிலீசை கொண்டாடினர்.

இந்நிலையில் பத்து தல படம் பார்க்க குழந்தை குட்டிகளுடன் வந்த நரிக்குறவர் சமூகத்தினரை சென்னையில் ரோகினி திரையரங்க ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் முறையாக டிக்கெட் எடுத்தும் படம் பார்க்க அனுமதிக்காத இச்சம்பவத்தை நிச்சயம் சிம்பு தட்ட கேட்க வேண்டும் என சிம்பு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக சம்மந்தப்பட்ட திரையரங்கை மூடவேண்டும் என மக்கள் கொந்தளித்துள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்:

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 584

    1

    0