நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகை… அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவங்க தான்!

Author: Shree
2 October 2023, 2:47 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் நயன்தாரா 9 ஸ்கின் என்ற சருமம் பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கும் பிராண்ட் பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி திரிஷா தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என கூறுகிறார்கள். ஆம், லியோ படத்தை அடுத்து கமல் – மணி ரத்னம் படத்தில் ஹீரோயினாக நடிக்க திரிஷா கமிட்டாகியுள்ளார். அதில் அவர் ரூ. 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். நயன்தாரா கடைசியாக நடித்த ஜவான் படத்திற்கே ரூ. 10 கோடி தான் சம்பளம் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1878

    12

    7