எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் ஒரே விஷயம்…. சர்ச்சைக்கு பின் மணிமேகலை நெகிழ்ச்சி பதிவு!

Author:
30 September 2024, 3:43 pm

தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வருபவர் தான் விஜே மணிமேகலை. இவர் 2000 காலகட்டத்தில் நடுப்பகுதியில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

vj manimegalai

ஆரம்பத்தில் பாடல் நிகழ்ச்சியிலும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார். அதன் பிறகு சில காலம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த மணிமேகலை பின்னர் விஜய் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்து தனக்கான தனி அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

விஜய் தொலைக்காட்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதில் தனது மிகச் சிறப்பான பெர்பாமென்ஸ் செய்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் நாட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதை அடுத்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொகுத்து வழங்கி போட்டியாளராக மாறினார். இந்த இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விஜே பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையே மிகப் பெரிய சண்டை வெடித்தது.

அதாவது தொகுப்பாளினி பணி செய்து வந்த தன்னை பிரியங்கா தன்னுடைய பணியை செய்ய விடாமல் குறுக்கிட்டு தன்னை டாமினேட் செய்து விமர்சித்ததாக கூறி மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதையும் படியுங்கள்: பாவம் மனுஷன்….. விவாகரத்து சர்ச்சைக்கு பின் மும்பைக்கு குடியேறிய ஜெயம் ரவி – வீடியோ!

இப்படி ஒரு நேரத்தில் தான் VJ பிரியங்கா குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஃபைனல் போட்டியில் டைட்டிலை வென்றார். விஷயம் இப்படி இருக்கும் சமயத்தில் மணிமேகலை தற்போது தனது Instagram பக்கத்தில் தான் கிராமம் ஒன்றில் பண்ணை வீட்டு கட்டி வரும் புகைப்படத்தை வெளியிட்டு “இந்த இடம் தான் தனக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் தருகிறது” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!