மீனாவிடம் முத்தம் கேட்ட நபர்… தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவம்!
Author: Shree10 August 2023, 9:42 am
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டூயட் ரவுண்டு நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியின் நடுவராக கலந்துக்கொண்ட நடிகை மீனாவிடம் சிறுமி ஒருவர் “இறுக்கி அணைத்து ஒரு உம்மா தருமா? என்று முத்து பட டயலாக்கை பேச அதற்கு மீனாவும் அந்த சிறுமியை கட்டி அணைத்து முத்தமிடுகிறார். இந்த போட்டோ சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.