கூவத்தூர் கூத்து.. மன்சூருக்கு மட்டும் Action இப்ப NO Reaction.. திரிஷாவை சீண்டிய நெட்டிசன்கள்..!

தமிழக அரசியல் குழப்பங்களில் தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர விடுதிதான் ஒரு சமயத்தில் மிகவும் முக்கிய இடம் வகித்தது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில் தான் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, அந்த பத்து நாட்களில் விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன் அந்த விடுதியை சுற்றி இருந்த கிராம மக்கள் கூட அவர்களது வீடுகளுக்கு செல்ல கெடுபிடிகள் பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் அப்போது தாக்கப்பட்டனர். முன்னதாக சசிகலா மட்டும் அடிக்கடி கூவத்தூர் விடுதிக்கு சென்று எம்எல்ஏக்கலை சந்தித்து பேசியும் வந்தார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான புகார்களை முன்வைத்து வருகிறார். அவர் பேசியுள்ள விஷயங்கள் இணையதளத்தில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

அதிலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவின் பெயரை கூறி கூவத்தூர் ரிசாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி அவர் பேசிய விஷயம் மிகப் பெரிய பிரளயத்தையே அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ஏற்படுத்தி இருக்கிறது.

கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் எம்எல்ஏ வெங்கடாசலம் என்ன கூத்து அடித்தார் என்ன செய்தார் அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியும். நடிகை திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அடம்பிடித்தார் என்றும், கர்ணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும், த்ரிஷாவுக்கு ஒரு நாளைக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், ஏவி ராஜு தெரிவித்துள்ளார்.

வெங்கடாசலம் குடிக்க மாட்டார். ஆனால், பெண்கள் விஷயத்தில் அவர் வீக் என்பதால் அதற்காக நடிகைகளை ஏற்பாடு செய்து பல நடிகைகள் அங்கே வந்தார்கள். சின்ன வயதான திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அப்போது அடம் பிடித்தார். இதற்கு ஆதாரத்தை நான் காட்ட முடியாது. இதெல்லாம் நடந்தது இதற்கெல்லாம் ஏற்பாடு செய்ததை அவர் தான் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சி உண்டாக்கியுள்ளது.

ஏவி ராஜூ அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது, விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரிஷாவுக்கு ஆதரவாக பல பேர் இறங்கி உள்ளனர். திரிஷாவுக்கு ஆதரவாக பல பதிவுகள் வந்தாலும், அவருக்கு எதிராகவும் தற்போது கருத்துக்களை தெரிவித்துக் கொண்டுதான் வருகின்றனர். ஏனென்றால், சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் தன்னை அவதூறாக பேசிவிட்டனர் என பதிவிட்டு பெரும் சர்ச்சைக்கு ஆஸ்திவாரம் போட்டார் திரிஷா. அந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில், மன்சூர் அலிகானுக்கு எதிராக திரையுலகினர் அனைவரும் திரண்டு வந்தனர்.

ஆனால், தற்போது திரிஷா பற்றி இப்படி ஒரு விஷயம் குறித்து எந்தவித Reaction கொடுக்காமல் அவர் வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இது குறித்து, கேள்வி எழுப்பி இருக்கும் வலைப்பேச்சு பிரபலம் சக்திவேல் ஆள் பலம், பணபலம், அதிகாரப்பலம், அரசியல் பலம் இல்லாத ஆள்னா உடனே Action. இது எல்லாம் இருக்கிற அரசியல்வாதினா No Reaction. என் திரிஷா சைலன்டாக இருக்கிறீர்கள்? என பதிவிட்டுள்ளார்.

Poorni

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

20 hours ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

20 hours ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

21 hours ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

22 hours ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

22 hours ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

23 hours ago

This website uses cookies.