சிவாஜியை நடிக்க விடாமல் தடுத்த பிரபு : வெளியான உண்மை!!
Author: Udayachandran RadhaKrishnan16 March 2023, 2:01 pm
இயக்குநர் பாலா படத்தில் நடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. நடிக்க கத்துக் கொடுத்துருவார். அந்தளவு நடிகர்கள் பிழிந்து எடுத்துவிடுவார் என்ற பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் உண்டு.
அப்படிப்பட்ட இயக்குநர் பாலா இயக்கிய படங்கள் எல்லாமே நடிகர்களுக்கு பெயர் வாங்கி கொடுத்திரும். அப்படித்தான் சேது படத்தை முடித்த கையோடு பாலா இயக்கிய அடுத்த படம் நந்தா.
இந்த படத்தில் சூர்யாவை கதாநாயகனாக கமிட் ஆன பின், பெரியவர் கதாபாத்திரத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்தை நடத்த சென்றுள்ளார் பாலா.
சிவாஜியோ நடிக்க ஓகே என கூறியுள்ளார். ஆனால் பிரபுவோ, அவருக்கு உடல்நிலை சரியில்லை, படம் முழுவதும் ராமநாதபுரம் என்பதால் உப்பு காத்து, மணலில் நடப்பது என்பது அவருக்கு ஒவ்வாது என கூறி சமாளித்துள்ளார்.
பின்னர் அந்த கதாபாத்திரத்துக்கு ராஜ்கிரணை நடிக்க வைத்துள்ளார் பாலா. இந்த தகவலை நடிகர் ராஜ்கிரணே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.