கிழிந்த ஆடையில் அசிங்கமா தெரியுது… சாய் பல்லவியின் நடன வீ டியோ பார்த்து அதிர்ந்துப்போன ரசிகர்கள்!
Author: Shree10 May 2023, 10:22 am
நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.
இந்நிலையில் சாய் பல்லவி ஆரம்பதில் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டடிருந்தபோது நிகழ்ச்சி ஒன்றில் வெஸ்டர்ன் உடையில் கவர்ச்சியாக நடனமாடியா வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த சமயத்தில் இதை பலர் மோசமாக விமர்சித்துள்ளனர். அன்றிலிருந்து அவர் அதுபோன்ற உடைகளை அணிவதையே நிறுத்திவிட்டாராம். அதன் பின்னர் சேலை மட்டுமே எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் அணிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இதோ அந்த வீடியோ லிங்க்: