ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?
Author: Prasad26 April 2025, 5:47 pm
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி
2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “மூக்குத்தி அம்மன் 2” உருவாகி வருகிறது.
இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இதில் நயன்தாராவுடன் ஊர்வசி, ரெஜினா கஸண்ட்ரா, மீனா, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை வேல்ஸ் இன்டெர்நேஷனல் ஐசரி கணேஷ், நயன்தாரா, சுந்தர் சி ஆகிய மூவரும் இணைந்து தயாரித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன.

இத்திரைப்படத்தின் போஸ்டரில் வேல்ஸ் நிறுவன லோகோவுடன், சுந்தர் சியின் அவ்னி சினிமேக்ஸ் லோகோவும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் லோகோவும் இடம் பெற்றிருந்தது.
ராசிதான் காரணமா?
ஆனால் இத்திரைப்படத்தை மூவரும் இணைந்து தயாரிக்கவில்லையாம் வேல்ஸ் நிறுவனம் மட்டுமே இத்திரைப்படத்தை முழு பணத்தை இறக்கி தயாரித்து வருகிறதாம். அதாவது சுந்தர் சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவன லோகோவை பயன்படுத்திய திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துவிட்டதாம், அந்த ராசி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்திலும் ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதனால்தான் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே போல் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்திவிட்டு நயன்தாராவி ரவுடி பிக்சர்ஸ் லோகோவை மட்டும் பயன்படுத்தாவிட்டால் நயன்தாரா கோபித்துக்கொள்வார் என்ற காரணத்திற்காக ரவுடி பிக்சர்ஸ் பெயரையும் இதில் இணைத்துவிட்டார்களாம். இப்படி ஒரு தகவல் வெளிவருகிறது.