யார் நெனச்சாலும் உள்ள போக முடியாது.. வனிதா ஒதுக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுதான்..!

Author: Vignesh
22 February 2024, 6:35 pm

நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் ஒரு கல்யாணம் வந்து மக்கள் மறந்து கிடந்த அத்தனை பிரச்சினைகளையும் மறுபடியும் நினைவுபடுத்த வைத்திருக்கிறது. அதாவது, ஒரு பக்கம் விஜயகுமார் பேத்தி தியாவின் கல்யாணம் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கும் அதே நிலையில், அதற்கு சரிசமமாக வனிதா பேசிய பேட்டிகளும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

வனிதாவுக்கும் விஜயகுமாருக்கும் பிரச்சனை என்பது கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கிறது. வனிதா இன்டர்வியூ கொடுக்க அவருடைய மொத்த குடும்பமும் அவரை ஒதுக்கி வைத்து விட்டது. வனிதா பிரிந்ததற்கு பிறகு நடந்த வீட்டின் முதல் நல்ல விஷயத்திற்கு கூட அவரை அழைக்காமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள். அவரை தவிர்த்து மற்ற எல்லோரும் கலந்து கொண்டு கோலாகலமாக அந்த திருமணம் நடைபெற்றது.

vijayakumar

அனிதா, கவிதா, அருண் விஜய் போன்றவர்கள் விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்கள். இவர்களுக்கு, வனிதா உடன் சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்காது என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், மஞ்சுளா மூலமாக பிறந்த பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி கூட வனிதாவை ஒதுக்குவது தான் இப்போது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அதாவது, வனிதா பேட்டிகளில் ஸ்ரீ பாப்பா ப்ரீத்தா, அருண் அண்ணா, அனிதா அக்கா என பேசினாலும் அவருடைய ஆரம்பகால இன்டர்வியூகளை பார்த்தால் தான் சில உண்மைகள் தெரியும். அப்பாவின் பெயரில் இருக்கிற வெறுப்பின் காரணமாக தன்னுடைய சொந்த அக்கா தங்கைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை மீடியாவுக்கு கொண்டு வந்து சிரிக்க வைத்து விட்டார்.

அது மட்டும் இல்லாமல் தன்னை பெற்ற தாய் மஞ்சுளாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார். ஒரு வேலை வனிதாவை மன்னித்து ஏற்றுக் கொண்டாலும், பிரீத்தா அல்லது ஸ்ரீதேவி யோசித்தாலும் அது கண்டிப்பாக அவருடைய திருமண வாழ்க்கையை பாதிக்கும். அதாவது, பிரீத்தாவின் கணவர் ஹரியை பற்றியும் வனிதா மிகவும் கீழ்த்தரமாகவும் மோசமாகவும் பேசி இருந்தார்.

இவர்கள் எல்லோருக்குமே தங்களுக்குள் இருக்கும் நெகடிவ்களை மறந்து விட்டு ஒரே குடும்ப சட்டத்தில் பொருந்தி விட்டார்கள். இதைத் தாண்டி, வனிதாவை உள்ளே நுழைய வைத்தால் அப்போது, வனிதா பேசிய எல்லாமே உண்மையாகிவிடும் என்ற பயம் தான் இதற்கு காரணம். அதாவது, வனிதாவும் இதற்கெல்லாம் பயப்படும் ஆள் கிடையாது என்பது எல்லோருக்குமே தெரியும்.

தியாவின் திருமணத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக இருப்பது அவருக்கு உள்ளுக்குள் வழியாக இருந்தாலும், பதில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்ஸ்டாகிராமில் சிங்கம் ஒன்று நடந்து வருவதை போல் வீடியோவை போட்டு மொத்த குடும்பமும் ஓரிடத்தில் ஒன்றாக சேரும் பொழுது நீங்கள் சிங்கம் போல் தனியாக இருந்தால், எவ்வளவு பவர்ஃபுல்லான ஆளாக நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டு உள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?