த்ரில்லிங்…. சோலோவா மிரட்டும் திரிஷாவின் ‘தி ரோட்’ டீசர்!

Author: Shree
4 May 2023, 9:27 pm

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

அப்படி இருந்த திரிஷா மார்க்கெட் இழக்க அந்த திருமணமே காரணமாக அமைந்தது. தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டு நிச்சயம் வரை சென்று கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தியது தான் காரணம்.

அதன்பின் சினிமாவிலும் திருமணத்திலும் தோல்வியை கண்டதால் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். பின்னர் 96 படத்தில் நடித்து ஹிட் கொடுத்து மீண்டும் ஒரு ரவுண்ட் வலம் வரத்துவங்கியுள்ளார். தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இன்று தனது 40வது பிறந்தநாள் கொண்டாடும் திரிஷாவின் ஸ்பெஷலாக அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் ‘தி ரோட்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் மிரட்டலான அவரது நடிப்பு ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!