பொன்னியின் செல்வன் படம் ரிலீஸுக்கு பின்பு ராஜ ராஜ சோழன் குறித்த தேடல் இணையத்தில் அதிகமாகியுள்ளது. பலரும் ராஜ ராஜ சோழன் வரலாறு பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எல்லா தரப்பிலும் இதுக் குறித்த பேச்சு, தேடல் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் ராஜ ராஜ சோழன் பற்றி இயக்குனர் வெற்றிமாறன் பதிவு செய்து இருக்கும் கருத்து அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
2 தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பியுமான திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் மணி விழாவையொட்டி, தமிழ் ஸ்டுடியோஸ் சார்பாக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குனர் வெற்றிமாறன், தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும் என தெரிவித்தார்.
வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிளம்ப இந்த விவகாரம் பேசும் பொருளானது. அரசியல் கட்சி தலைவர்களும் இதுக் குறித்து பேசி இருந்தனர். நடிகர் கமல்ஹாசன், சீமான், எம்.பி ஜோதிமணி ஆகியோரும் வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இதுக்குறித்து தனது கருத்தை ஷேர் செய்துள்ளார் சீரியல் நடிகர் ராகவ். தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் ராகவ், ரஜினியுடன் எந்திரன் படத்திலும் நடித்து இருக்கிறார். சின்னத்திரையில் பலராலும் அறியப்படும் முகமாக இருக்கும் ராகவ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், ராஜராஜ சோழன் ஒரு இந்து கிடையாது. ஏனென்றால் அவர் பிறந்த காலகட்டத்தில் இந்து என்ற ஒரு மதமே இல்லை என்று சொல்வது எப்படி இருக்கிறது என்றால், பாரதி மகாத்மா காந்தி இவர்களெல்லாம் இந்தியர்களே கிடையாது. அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசின் குடிமகன்கள். ஏனென்றால் இவர்கள் பிறந்த போது இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது. 1947 க்கு பின்னர் தான் அதுவே உருவானது. என கூறி கடைசியாக எதுக்கு என்ற மோடில் ரியாக்ஷன் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் ராகவ், வெற்றிமாறன் கருத்தை மறைமுகமாக எதிர்க்கிறார் என ரசிகர்கள் இன்ஸ்டாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.