நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!

Author: Selvan
21 December 2024, 9:47 pm

தி ஸ்மைல் மேன் படக்குழுவின் சிறப்பு நிகழ்வு

சியாம் பிரவீன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”.சரத்குமாரின் 150 வது படமாக உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Sarathkumar speech at The Smile Man event

படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது .இதில் படக்குழுவை சேர்ந்த பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.அப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஆழியா,நடிகர் சரரத்குமாரை பார்த்து UNCLE என்று குறிப்பிட்ட நிலையில்,அதற்கு அவர் நான் எப்போதும் இளமை தான் எனக்கு வயசு ஆகவே ஆகாது,ஆழியா வளர்ந்து என்னுடைய படத்தில் ஹீரோயினியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுறதற்கு இல்லை என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!

மேலும் அவர் நடிகர்களை தேவைப்படும் போது பயன்படுத்துறார்கள் இல்லையென்றால் கூத்தாடிகள் என பட்டம் சொல்லி ஒதுக்கி வைக்கிறார்கள்,நான் யாரை குறிப்பிட்டு சொல்கிறேன் என உங்களுக்கு நன்றாக தெரியும் என மறைமுகமாக யாரையோ தாக்கி பேசியுள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் சூர்யவம்சம்2 குறித்த அப்டேட் கேட்ட போது,அது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விரைவில் அறிவிப்பார் என்ற தகவலையும் கூறியுள்ளார்.நடிகர் சரத் குமார் தற்போது அரசியலை விட சினிமாவில் முழு ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…