கமல் வீட்டு வாசலில் கால் கடுக்க காத்திருந்து வாய்ப்பு பெற்ற ரஜினி .. உண்மையை வெளியிட்ட வாரிசு..!

Author: Vignesh
12 May 2023, 10:41 am

இரு உச்சக்கட்ட நடிகர்களாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன். இவர்கள் இருவரும் தங்களுடைய திறமையால் தனக்கென்று ஒரு பெயரை நிலைநிறுத்திகொண்டு வருகிறார்கள்.

முன்னதாக, 80களில் இருந்து இப்போது வரை ரஜினியுடன் ஏட்டிக்குப் போட்டியாக நிற்கும் கமலின் வீட்டு வாசலில் அவருக்காக காத்திருந்த கொடுமை எல்லாம் ரஜினிக்கு அரங்கேறி உள்ளது.

rajini kamal- updatenews360

தமிழ் சினிமாவிற்கு ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து நடித்த அபூர்வ ராகங்கள் படத்தில் தான் சூப்பர் ஸ்டார் முதன்முதலாக அறிமுகமானார்.

அபூர்வ ராகங்கள் படத்தின் படப்பிடிப்பின் போது கவிதாலயா நிறுவனத்திற்கு சொந்தமான காரில் தான் படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் அழைத்து செல்லப்படுவார்கள். அதே கார் கமலையும் பிக்கப் பண்ண அவரின் வீட்டிற்கு வரும், அவரின் காரில் இருந்த ஸ்ரீவித்யா கமலின் வீட்டிற்கு கார் வந்ததும் உள்ளே சென்று காபி வேண்டும் என்று குடிப்பாராம்.

rajini kamal- updatenews360

மேலும், கார் வந்த பிறகுதான் கமல் எழுந்து குளித்துவிட்டு கிளம்புவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுவரை அவரின் வீட்டு வாசலிலேயே தான் ரஜினி அங்கும் இங்கமாக நடந்து கொண்டு இருப்பாராம். ரஜினியை அந்த சமயத்தில், கமல் வீட்டின் உள்ளே கூட போக அவ்வளவு தயங்கியும், அவரை வீட்டிற்குள் வர சொல்ல கூட ஆள் யாரும் இல்லையாம்.

rajini kamal- updatenews360

ஏனென்றால் ரஜினிகாந்த் அப்போது யாருக்கும் தெரியாத முகம் என்றும், இருப்பினும் வாய்ப்புதான் முக்கியம் என்று கமல் கிளம்பும் வரை வீட்டு வாசலிலேயே நின்று அதன் பிறகு தான் படப்பிடிப்பிற்கு எல்லோருடனும் சென்றார் என கமலின் அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

rajini kamal- updatenews360

சுஹாசினிக்கு என்ன பெருமை என்றால் ரஜினி இப்போது என்ன தான் பெரிய நடிகராக இருந்தாலும் அவர் தன்னுடைய சித்தப்பா கமல் மற்றும் சுஹாசினியின் அப்பா ஆகியோருடன் தங்கி இருந்த வீட்டின் வாசலில் காத்திருந்துதான் படத்தில் நடித்திருக்கிறார் என பெருமை பீத்தி உள்ளார்.

rajini kamal- updatenews360

இதனைல், சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இருப்பினும் இப்படி எல்லாம் தான் ரஜினி பிரபலங்களின் மத்தியில் படிப்படியாக உயர்ந்து தற்போது அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு இமயமலையாக வளர்ந்து நிற்கிறார் என்றும் சிலர் பெருமிதம் கொள்வது குறிப்பிடத்தக்கது.

suhasini-updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 863

    10

    2