பிரபல நடிகையை விரட்டியடித்த கோவில் நிர்வாகம்… குடும்பத்துடன் பழனி மலையில் தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2023, 2:32 pm

மலையாள நடிகையான அவர் தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, காதலில் சொதப்புவது எப்படி, திருட்டு பயலே 2, ராட்சசன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதுதவிர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி அளித்திருந்தார். தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் இந்தி, மலையாளம் போன்ற பிறமொழிகளில் நடித்து வருகிறார் அமலா பால்.

நடிகை அமலா பால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கேரளாவில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த கோவில் ஊழியர்கள் அவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.

அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதாலும், அந்தக் கோவிலில் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவதாலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது வருத்தத்தை பதிவு செய்திருந்த அமலா பால், மதத்தை காரணம் காட்டி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்தது வேதனை அளித்ததாகவும், இந்த மத பாகுபாடு விரைவில் மாற வேண்டும் என்றும் அந்த கோவிலில் பதிவேட்டில் எழுதி வந்தார். மதத்தை காரணம் காட்டி அமலாபாலை கேரளா கோவிலில் அனுமதிக்க மறுத்த விஷயம் சமூக வலைதளங்களிலும் பேசு பொருள் ஆனது.

இந்நிலையில், நடிகை அமலா பால் தற்போது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி மலை முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

ரோப் கார் மூலம் தனது தாய் மற்றும் தனது தம்பியின் மனைவியுடன் கோவிலுக்கு சென்ற அமலாபால் அங்கு எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 1433

    25

    15