காக்க காக்க படத்தை தவறவிட்ட டாப் நடிகர் – தட்டித்தூக்கிய சூர்யா!

Author: Rajesh
10 February 2024, 10:40 am

சூர்யா ஜோதிகா ஜோடியின் சினிமா கெரியரில் மிக முக்கிய திரைப்படம் எது என்று கேட்டால். காக்க காக்க திரைப்படம் என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். காரணம் அந்த படத்தில் நடித்தபோது அவர்கள் உண்மையிலே காதலித்து ரொமான்ஸ் காட்சிகளில் ரியல் ஆகவே நடித்தார்கள். கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், சூர்யா, ஜோதிகாவுடன் ஜீவன், ரம்யா கிருஷ்ணன், டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இந்த படத்தில் சூர்யா அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் வேற லெவல் தூள் கிளப்பி இருப்பார்.இந்நிலையில் தற்போது இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் என்ற ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி எல்லோரையும் வியக்க செய்துள்ளது. அதாவது இப்படத்தின் கதை முழுக்க முழுக்க நடிகர் விஜய்க்காக தயார் செய்யப்பட்டது தானாம்.

ஆனால், அவர் வேறு சில திரைப்படங்களில் கமிட்டாகி படு பிசியாக இருந்ததால் சூர்யாவை வைத்து படம் எடுத்தாராம் கெளதம் மேனன். இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார் சூர்யா. இப்படத்திற்காக சூர்யாவை கெளதம் மேனனிடம் சிபாரிசு செய்ததே ஜோதிகா தானாம். இதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியது குறிப்பிடத்தக்கது.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 260

    0

    0