மகன்கள் கூறிய அந்த வார்த்தை : அதிர்ந்து போன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ..!

Author: Rajesh
30 March 2022, 5:07 pm

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

இதனிடையே, நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ ஆல்பத்திற்கு நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்தார். இதனால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த நடிகர் தனுஷின் பெயரை நீக்கினர். இந்த செயல் தனுஷ், ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி, இருவரும் சேர வேண்டும் என விரும்பி திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இருவரும் மீண்டும் இணைவதற்கு சாத்தியமே இல்ல என்றே தெரிகிறது.

இதனிடையே, தனுஷ் சமீபத்தில் தன் பிள்ளைகளுடன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி குறித்து பேரன்களிடம் ரஜினி அது பற்றி விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் அப்பாவுடன் இருப்பது தான் பிடித்திருக்கிறது கூறியதாகவும், இதனால் அதிர்ந்து போன ரஜினி தன் மனைவியிடம் ஐஸ்வர்யா குறித்து கோபமாக பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபகாலமாக சமூக வலை தளங்களில் பல உருக்கமான பதிவுகளை பதிவிட்டு வருவது, மகன்களும் அப்பாவுடன் இருக்க ஆசைபடுவதால் வந்த கலக்கம் தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!