கட்டின மனைவியை அழைத்து வரல… ஆனால், திரிஷாவின் அழகில் மயங்கி விஜய் சொன்ன வார்த்தை!

Author: Shree
3 November 2023, 8:09 pm

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. திரைஇப்படம் படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.

சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்தனர்.

சுமார் ரூ. 300 கோடியில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 550 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் வெற்றிவிழா அண்மையில் மிக பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ், ‘பிக் பாஸ்’ ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், இயக்குனர் ரத்தினகுமார் , நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இவ்விழாவில் நடிகை திரிஷா குறித்து பேசிய தளபதி விஜய், ” திரிஷா இளவரசி” என கூறி அவரது அழகை புகழ்ந்து பேசினார். நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை இளவரசி கதாபாத்திரத்தில் நடித்திருந்ததை விஜய் கூறினாலும். இது சமூகவலைத்தளங்களில் காதல் கிசுகிசுவாக பரவி வருகிறது. ஏற்கனவே திரிஷா விஜய் காதல் வதந்தி பரவிய நிலையில் விஜய்யின் இந்த பேச்சு மீண்டும் வைரலாகி வருகிறது. அதிலும் இவ்விழாவில் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை அழைத்துவராமல் திரிஷாவின் அழகை புகழ்ந்துள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 513

    0

    0