சிறுநீர் கழிக்கவே பிடிக்காது… காரணம் இது தான் – முகம் சுளிக்க வைத்த நஸ்ரியாவின் பதில்!

Author: Shree
16 September 2023, 3:18 pm

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

nazriya nazim - updatenews360

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நஸ்ரியா ராஜா ராணி படம் வெளியான சமயத்தில் அப்படத்தின் ப்ரமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லீயுடன் கலந்துக்கொண்டு கலகலப்பாக பேசினார்.

அந்த பேட்டியில், உங்களின் கேவலமான, ரகசியமான சீக்ரெட் என்ன? என்ற கேள்விக்கு ஆம், நான் பாத்ரூம் போகவே மாட்டேன். எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்பதற்காக தண்ணீர் கூட அதிகமாக குடிக்கவே மாட்டேன். காரணம் எனக்கு பாத்ரூம் போகவே பிடிக்காது என பதில் சொன்னார். நஸ்ரியாவின் இந்த விசித்திரமான பழக்கத்தை கேட்டு அட்லீ மற்றும் டிடி முகம் சுளித்து விட்டார்கள்.

  • Serial Actor Who Got Divorce from his wife விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
  • Views: - 383

    0

    0