அப்பவே விக்ரம் – ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர வேண்டியது.. எல்லாம் இயக்குநர் போட்ட தப்பு கணக்கு!!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2023, 4:04 pm
சினிமாவில் வாய்ப்பு என்பது அரிதான விஷயம். திறமையை வெளிப்படுத்தி உச்சம் தொடுவது அதை விட அரிது. எத்தனையோ பேர் திறமையிருந்தும் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் உள்ளனர்.
ஆனால் தோற்றாலும், ஜெயித்தாலும் அது சினிமா மட்டும்தான் என தனது திறமை, கடின உழைப்பு மூலம் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ஆரம்ப கட்டத்தில் விக்ரம் நடித்து வந்தார். ஆனால் எந்த படமும் ஹிட்டாக அமையவில்லை. 99ல் வெளியான சேது படம் திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது வரை முன்னணி நடிகரகா இருக்கும் விக்ரம் அனைத்து இயக்குநர்களின் படத்திலும் நடித்துவிட்டார். ராவணன் படம் மூலம் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடித்தார். என்ன நடிப்பு என மெச்சும் அளவுக்கு விக்ரம் வேறு பரிணாமத்தில் நடித்திருந்தார்.
இந்த ஜோடி மீண்டும் மணிரத்னம் படமான பொன்னியின் செல்வனிலும் அமைந்தது. இரண்டு படங்களிலும் ரெண்டு பேரும் ஜோடி சேரவில்லை. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில்தான் ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் ஜோடியாக நடிக்க வேண்டிய படத்தின் பற்றி தகவல் கிடைத்துள்ளது. 2005ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வேண்டியவர் ஐஸ்வர்யா ராய்.
ஐயங்கார் வீட்டு பெண்ணாக நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இறுதியில் சதாவுக்கு வாய்ப்பு போனது. இந்த தகவல் அந்நியன் படம் குறித்து விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.