தன்னைத் தானே திரையில் கண்டு மெய் சிலிர்த்த விஞ்ஞானி; அடுத்து செய்தது என்ன??

Author: Sudha
5 July 2024, 3:07 pm

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கும் போது அப்படம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்த ஹாலிவுட் திரைப்படம் தி தியரி ஆஃப் எவரிதிங்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.அவருடைய வாழ்க்கை வரலாற்றை சித்தரிப்பதாக திரைப்படம் அமைந்தது.

ஸ்டீபன் ஹாக்கிங் அறிவியலாளர் அண்டங்களை பற்றி ஆய்வு செய்பவர், ஒரு சிறந்த நூல் ஆசிரியர் இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் காஸ்மாலஜி மையத்தின் இயக்குனராக பணியாற்றினார். பிளாக் ஹோல் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டார்.

இவருடைய வாழ்க்கை வரலாறு 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் மார்ஷ் அவர்களால் தி தியரி ஆஃப் எவரிதிங் என்று அவருடைய புத்தகத்தின் பெயராலேயே திரைப்படமாக வெளியிடப்பட்டது நல்ல விமர்சனங்களையும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.

எடி ரெட்மன் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தை பார்த்த ஸ்டீபன் ஹாக்கிங் தன்னையே சில நேரங்களில் இந்த திரைப்படத்தில் பார்த்ததாக தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் திரைக் குழுவினரை கௌரவிக்கும் விதமாக தனது கம்பெனியன் ஆப் ஹானர் பதக்கத்தையும் அவர் கையெழுத்திட்ட ஆய்வறிக்கையையும் அனுப்பி வைத்தார்.

  • Ajith Kumar Vidamuyarchi movie update அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..பல நாள் கேள்விக்கு பதில் கொடுத்த படக்குழு..!
  • Views: - 132

    0

    0