தமிழ்நாட்டில் நல்ல தரமான பள்ளிகளே இல்லை… நடிகர் சூர்யா பேசிய வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2025, 12:33 pm

நடிகர் சூர்யா, வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும், கடின உழைப்பால் பல படங்கள் மூலமாக நல்ல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று உயர்ந்தவர்.

உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, தியா, தேவ் என இரு குழந்தைகள். தற்போது சூர்யாவும், ஜோதிகாவும் அவரவர் கேரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க: விஜய் டிவியில் இருந்து தாவிய பிக் பாஸ் தமிழ் : வேறு சேனலுக்கு மாற்றம்!

இருந்த போதும், கடந்த முறை தமிழகத்தில் நடந்த ஆட்சியில் ஏற்பட்ட அவலம் குறித்து சூர்யா குரல் கொடுத்தார். ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்த போது மவுனமாக இருந்தது பேசு பொருளானது.

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா, ஜோதிகா தனது மகள், மகனை அழைத்துக் கொண்டு மும்பையில் செட்டில் ஆகியுள்ளனர். இது குறித்து பல்வேறு கருத்துகள் பரவின.

No Good Quality Schools in Tamilnadu Says Surya

ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியே மும்பைக்கு செட்டில் ஆனதாக சூர்யா விளக்கமளித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சூர்யா கூறியதாவது, குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம். தமிழகத்தில் தரமான பள்ளிகள் இல்லை. சென்னையில் ஒன்று இரண்டு IB பள்ளிகள் உள்ளது. மும்பையில் ஏரளாமான IB பள்ளிகள் உள்ளதால் குழந்தைகளின் படிப்புக்காக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

  • Laika Productions exits Jason Sanjay film விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!
  • Leave a Reply