நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது, அதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி குரலில் ‘ரஞ்சிதமே’, சிம்பு குரலில் ‘தீ தளபதி’ என 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி, யூடியூப்பில் பல மில்லியன் வீவ்ஸ்களை கடந்து புதிய சாதனை படைத்தது.
வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இருவருக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் வாரிசு படத்தில் விஜய்க்கு இன்ட்ரோ பாடல் ஒன்று உள்ளது. அந்த பாடல் ஆடியோ வெளியாகும் 24ஆம் தேதியே வெளியிடப்படும். அதுவும் நேரலையில் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடலை விஜய்யின் ஆஸ்தான் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய்க்காக அனிருத் பல பாடல்களை பாடியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
This website uses cookies.