மாரி செல்வராஜ் வீட்டில் சாமி ரூம் கிடையாது… அதற்கு பதில் என்ன வச்சிருக்காருனு தெரியுமா?

Author: Shree
6 July 2023, 9:35 am

கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால், ரவீனா ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மாமன்னன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சமூக நீதியையும், சமத்துவத்தையும் பேசும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மாமன்னன் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால், இப்படத்தின் வெற்றியை அண்மையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதுதவிர இயக்குனர் மாரி செல்வராஜுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றையும் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார் உதயநிதி ஸ்டாலின். அதன்படி மாமன்னன் படத்தை தன் வாழ்வில் மறக்கமுடியாத படமாக அமைத்து கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு கார் ஒன்றை பரிசளித்தார் உதயநிதி. இந்நிலையில் மாரி செல்வாராஜ் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது மாரி செல்வராஜின் வீட்டில் பூஜை அறையே கிடையாதாம். அவர் கடவுளையெல்லாம் வழிபடவே மாட்டாராம். அதற்கு பதிலாக தன் வீட்டில் நிறைய பன்றிகளின் புகைப்படங்களை தான் வைத்துள்ளாராம். ஒருமுறை உதயநிதி அவர் வீட்டிற்கு சென்றபோது… என்ன சார் நிறைய பன்றிகள் போட்டோவையே வச்சிருக்கீங்க? என கேட்டதற்கு பதிலளித்த அவர் ஆமாம், சார் எனக்கு பன்றிகள் தான் ரொம்ப பிடிக்கும் என கூறினாராம்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 834

    4

    2