படையப்பா படத்தில் பல கலவரங்கள் நடந்தன.. பல வருடங்களுக்கு பிறகு வெளிவரத் தொடங்கிய உண்மைகள்..!

Author: Rajesh
3 April 2022, 4:31 pm

தமிழ் சினிமாதுறையில் பல கமர்சியல் படங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவருடைய இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா.

இந்த திரைப்படம் இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்த படமாக உள்ளது. மேலும், படையப்பா படம் வணிக ரீதியாக மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது. படையப்பா படம் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம். அந்த அளவிற்கு அவர்களது கெரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு பல படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த நிலையில், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் படையப்பா படப்பின் போது நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், படையப்பா படத்தில் ஒரு ஊஞ்சல் காட்சி வரும். ரஜினி தன்னுடைய துண்டால் ஊஞ்சலை கீழே இறங்கி விடுவார். அந்தக் காட்சிகள் எடுக்கும்போது பத்துக்கும் மேற்பட்ட டேக்குகள் ரவிக்குமார் எடுத்தாராம். அந்த காட்சி எடுக்கும்போது ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்களாம்.

இப்படி பல போராட்டங்களுக்குப் பின் அந்த காட்சியை ஒருவழியாக எடுத்த முடித்தாராம் கேஎஸ் ரவிக்குமார். இதுபோன்று படையப்பா படத்தில் பல கலவரங்கள் நடந்து உள்ளது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கேஎஸ் ரவிக்குமார் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ