விஜய்க்கு குடும்பத்தின் மேல் பாசமே இல்லாமல் பண்ணிட்டாங்க… இரண்டு பேர் மீது கடுங்கோபத்தில் சங்கீதா?
Author: Shree5 August 2023, 12:47 pm
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.
பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே விஜய் – சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும். அவர்கள் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், அதெல்லாம் வதந்தி என்று விஜய் மறைமுகமாக கல்வி விருது விழாவில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், சங்கீதா விஜய் மீதும் அவரை சார்ந்த இரண்டு நபர் மீதும் கடுங்கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது முன்பெல்லாம் விஜய்யுடன் நடிக்கும் நடிகைகளை கூட யார் நடிக்கவேண்டும் என சங்கீதா தான் தீர்மானிப்பாராம். ஆனால், விஜய் கடந்த சில வருடமாகவே புஷ்லி ஆனந்த் ஜெகதீஸ் ஆகியோரது பேச்சை தான் கேட்கிறாராம்.
அவர்கள் சொல்லித்தான் அரசியலில் களமிறங்கினாராம். இப்போது எல்லாமே அவர்கள் இரண்டு பேர் தான் என்பதால் குடும்பத்தை கூட மறந்துவிட்டாராம் விஜய். அதனால் தான் சங்கீதா விஜய்யுடன் வாக்குவாதம் செய்து சண்டை போட்டு வெளிநாட்டில் தன் பிள்ளைகளுடன் வசித்து வருகிறாராம். மேலும், விஜய் மகன் சஞ்சீவ் கூட ‘என் அப்பாவைப் தேவையில்லாமல் அரசியலில் தவறான வழிக்கு கொண்டு செல்கிறீர்கள்’ என புஷ்லி ஆனந்திடம் சண்டை போட்டதாக பயில்வான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.