இந்த வீடியோவுக்கு தான் ரூ. 10 கோடி கேட்குறாங்க – இலவசமா வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

Author:
16 November 2024, 9:47 pm

தனுஷ் மீது புகார்:

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்னுடைய திருமண விடியோவை நெட்பிளிக்ஸ் தலத்தில் வெளியிட நடிகர் தனுஷ் மறைமுகமாக எங்களுக்கு தொல்லைகொடுத்து வருகிறார் என தனுஷ் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ளது தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நயன்தாராவுக்கு திரைத்துறை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Nayanthara Vignesh shivan

இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலடி:

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவுக்கு தான் 10 கோடி கேட்டார்கள் எனக்கூறி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது திரைப்படத்தின் சூட்டிங் பாண்டிச்சேரி எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரூ. 10 கோடி கேட்ட வீடியோ இலவசமாக:

vignesh shivan

மேலும் அதனுடன் இன்னொரு தனது திருமண வீடியோவை நினைத்து தங்களது காதல் பயணத்தை குறித்து பேசி இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ரூ 10. கோடி கேட்டு டிமாண்ட் செய்த வீடியோவை விக்னேஷ் சிவன் இலவசமாக instagram-ல் வெளியிட்டு இருக்கிறார் என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!