அந்த விஷயத்தில் தனுஷை ரொம்ப ஏமாத்தினது இவங்க தான்.. சகோதரிகள் Open Talk..!
Author: Rajesh9 July 2023, 9:00 pm
தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா.
2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார். தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தனுஷின் சகோதரர் செல்வராகவன் தமிழ் சினியுலகில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இவர்களது சகோதரிகள் டாக்டர் தொழிலில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் செல்வராகவன் தன் ஒரு சகோதரிகளுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய அவரது சகோதரி கார்த்திகா, தனுஷ் தான் பாவம். டிவியில் செல்வராகவன் சொல்றதுதான் ஓடும். தனுஷ் வாங்கி வந்த பிஸ்கேட்டை ஏமாற்றி வாங்கி செல்வராகவன் தான் ஃபுல்லா சாப்பிடுவார் என நகைச்சுவையாக பேசியுள்ளார்.