அவங்களுக்கு எங்கள பார்த்தா பிடிக்கல – அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள் உருக்கம்!

Author: Shree
30 March 2023, 3:54 pm

சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பத்து தல. கன்னடத்தில் வெற்றியடைந்த முஃப்டி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் மக்கள் பத்து தல படம் பார்க்க டிக்கெட் எடுத்து உள்ளே சென்ற போது அவர்கள் திரையரங்க ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனை அங்கிருந்த ஒரு இளைஞர் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வீடியோ எடுத்து வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஜிபி பிரகாஷ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து இது குறித்து விளக்கம் அளித்த ரோகிணி திரையரங்கு உரிமையாளர் பன்னீர்செல்வம், பத்து தல படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் அவர்களை படம் பார்க்கவும் அனுமதித்து வீடியோ வெளியிட்டனர்.

படம் பார்த்த பின்னர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தினர், “பத்து தல படத்தை பார்க்க ஆசையாக வந்தோம் ஆனால் படத்தை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இதே போல் தான் விஜய், அஜித் படத்திற்கும் எங்களுக்கு நடந்தது. அவுங்களுக்கு எங்களை பார்த்தால் பிடிக்கவில்லை போல” என்று உருக்கமாக பேசியுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 491

    0

    1