விஜய் படத்துக்கு 150 டைட்டிலா..அந்த ஒரு பாட்டுனால தப்பிச்சேன்..வெளிப்படையாக பேசிய இயக்குனர்.!

Author: Selvan
21 February 2025, 9:14 pm

‘திருப்பாச்சி’ பட டைட்டிலின் சுவாரசியம்

தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும் சிக்கல் எழுந்து வருகிறது.படத்திற்கு புது புது டைட்டில் வைப்பதில் படக்குழு திணறி வரும் நிலையில்,பலரும் பழைய பட டைட்டிலை தூசி தட்டி வைத்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: ரஜினிக்காக எடுத்த முடிவு…SK 23 படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் என்னனு தெரியுமா.!

முந்தய காலத்தில் ரஜினி,கமல்,விஜய் படங்களுக்கு படத்தில் அவர்களுடைய கதாபாத்திரத்தின் பெயரையே டைட்டிலாக வைத்து விடுவார்கள்,அந்த வகையில் விஜய் நடித்த படம் ஒன்றிற்கு டைட்டில் வைத்த சுவாசிரிய தகவலை இயக்குனர் பேரரசு சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Perarasu about Vijay’s Thirupaachi

அதாவது விஜய் நடித்த திருப்பாச்சி படத்திற்கு 100 டைட்டில் வரை யோசித்து கடைசியில் படத்தில் அவருடடைய கதாபாத்திரத்தின் பெயரான கிரி என்ற பெயரை பயன்படுத்தி கிரிவலம் என வைக்க முடிவு எடுத்தோம் ஆனால் அந்த பெயரை வேறொரு படத்திற்கு ஒரு இயக்குனர் பதிவு செய்திருந்தார்.

இதனால் பெரும் குழப்பத்தில் இருந்த போது,ஒரு தடவை டிவியில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தின் திருப்பாச்சி அரிவாளை தீட்டுகிட்டு என்ற பாடலை கேட்டேன்,உடனே திருப்பாச்சி தான் இந்த படத்திற்கு சரியான தலைப்பாக இருக்கும் என முடிவு செய்து,அதையே வைத்து விட்டேன் என அந்த பேட்டியில் சுவாரசியமாக பகிர்ந்திருப்பார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…