அடுத்த ஆதி குணசேகரன் யார்? மரண வீட்டிலே எதிர்பாராத பதில் சொன்ன எதிர்நீச்சல் இயக்குனர்!

Author: Shree
8 September 2023, 6:48 pm

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தானாகவே காரை ஓட்டிச்சென்று வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது.

இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்துவின் மரணத்திற்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்த வந்த எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திரு செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அடுத்த ஆதி குணசேகரன் யார்? என்ற கேள்விக்கு கடுப்பான திரு செல்வம், எங்க வந்து என்ன கேட்குறீங்க? இதெல்லாம் இங்க பேசவேண்டிய விஷயமே இல்லை என அவர் கோபமாக பதிலளித்து விட்டு சென்றார். அடுத்த ஆதி குணசேகர் யாராக இருந்தாலும் நிச்சயம் அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?