வாழ்க்கைக்கு இது தான் முக்கியம்….நச்சுனு நாலு விஷயத்தை சொன்ன ராஷ்மிகா!

Author:
22 August 2024, 2:42 pm

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் கன்னடத்தில் வெளிவான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார்.

rashmika mandanna -updatenews360

அதன் பிறகு தெலுங்கில் சாலோ திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் சுல்தான் திரைப்படத்தின் மூலமாக நேரடியாக ஹீரோயினானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முன்னதாக வெளிவந்த டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

rashmika

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் உணவு, சிரிப்பு, தூக்கம், பயணம்,நல்ல புத்தகம்,காபி மற்றும் அவர் நாய் குட்டி என எல்லாவற்றையும் பதிவு செய்து இவை அனைத்தும் என் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்… இது தான் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என பதிவிட்டுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!