தமிழ் சினிமாவின் கருப்பு வைரம் என பெண் ரசிகைகளால் அதிகம் விரும்பப்பட்டவர் நடிகர் முரளி. கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான இவர் “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.
இவர் ஷோபா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு அதர்வா, ஆகாஷ், காவ்யா என மூன்று பிள்ளைகள். இதில் அதர்வா பிரபலமான நடிகராக பார்க்கப்படுகிறார். ஆகாஷ் தற்போது புதிய படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.
இதனிடையே, 25 வருட நண்பரான முரளியே என்னை ஏமாற்றி விட்டார் என்று மனவேதனையில் இயக்குனர் ராஜகுமாரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
ராஜகுமாரன் அளித்த பேட்டியில், நடிகர் முரளியும் நானும் 25 வருட நண்பர்கள். அவர் நடித்த முதல் படத்திலிருந்து நான் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். அப்போதிலிருந்தே முரளியுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. நல்ல நண்பர்களாக இருந்தோம். அப்படி இருந்தும் அவர் நான் எடுத்த படத்தின் போது ஒழுங்காக சூட்டிங் வரவில்லை. ரொம்ப கஷ்டம் கொடுத்து விட்டார். ரொம்ப தவறாக தொழில் ரீதியாக நடந்து கொண்டார்.
அதனால்தான் நான் சினிமாவை போடா என்று ஒதுக்கி வைத்து விட்டேன். நல்லா தெரிந்த நெருங்கிய நண்பனே கஷ்டம் கொடுத்தால் மன வேதனை ஏற்படும். நான் 30 வருடமாக சினிமா உலகில் இருக்கிறேன். இதுவரை நான் 10 லட்சம் கூட சம்பாதித்து இருக்க மாட்டேன். பணத்திற்காக நான் சினிமாவில்இருக்கவில்லை. அதன் மீது உள்ள காதலினால் தான் நான் சினிமாவிற்கு வந்தேன். அதேபோல் விஜயகுமார் சாரூம் என்னிடம் அருண் விஜய் பற்றி கேட்டிருந்தார்.
படமெடுக்க சொன்னார். நான் முடியாது, இப்ப நான் படம் பண்ணுவதில்லை என்று சொல்லிவிட்டேன். அது மட்டும் இல்லாமல் நான் சில புத்தகங்களை படித்திருந்ததால் எனக்கு ஜாதகம் பற்றி ஒரு அளவு தெரியும். அப்போது அவரிடம் 20 வருடங்களுக்கு பிறகு தான் உங்களுடைய மகனின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அதேபோல் தற்போது அவர் வில்லனாகவோ,ஹீரோவாகவோ மக்கள் மத்தியில் பதிந்திருக்கிறார் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை ராஜகுமாரன் பேசியிருக்கிறார். மேலும், இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் முரளி நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் காதலுடன் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.