தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நட்சத்திர நடிகராக இருப்பவர் தான் விக்ரம். இவர் குறிப்பாக எப்பேற்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மெனக்கட்டு நடித்து தன்னுடைய கேரக்டருக்கு பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பார்.
கடந்த 1999 இல் சேது திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி , பிதாமகன், ஜெமினி, கிங், அந்நியன், கந்தசாமி ,இராவணன் ,தெய்வத்திருமகள், தாண்டவம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக தற்போது இருந்து வருகிறார் .
இந்நிலையில் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் இந்த தங்கலான். இந்த திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகர் விக்ரம் பா ரஞ்சித்துடன் இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றார் .
அப்போது புகைப்படம் எடுக்கும் போது விக்ரமின் ஃபோனில் குழந்தையின் கைகள் அடங்கிய க்யூட்டான வால் பேப்பர் ஒன்று தென்பட்டது. அது நடிகர் விக்ரமின் பேத்தியின் கைகள் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கு மனோ ரஞ்சித் என்பவருடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.