பெண்களுக்கு கணவனிடம் அது வேணும்… இல்லனா – அந்த ஆசையை கூறிய சமந்தா!
Author: Rajesh20 February 2024, 7:13 pm
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கணவன் , மனைவி உறவு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து பேசியுள்ள ,சமந்தா, ” இப்போ எல்லாம் பெண்கள் அந்த காலத்து பெண்கள் போன்று பொருளாதார ரீதியாக கணவனை சார்ந்து இருப்பதில்லை. தன் தேவைகளை தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். பிள்ளைகளையும் பெண்கள் சம்பாதித்து ஆண்களுக்கு ஈடாக படிக்கவைத்து வளர்க்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது கணவன்மார்கள் தங்களின் மனைவிகளுக்கு சம உரிமை கொடுக்கவேணும். அவர்களிடம் நண்பர்களாக பழகவேண்டும். பெண்களை அடிமைப்படுத்தக்கூடாது. இது இல்லாமல் போகும் போது தான் அங்கே இருக்கும் உறவு கஷ்டமானதாகி விடுகிறது. வேறு வழியின்றி பிரியவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என சமந்தா கூற அவரது கருத்திற்கு பலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.