தமிழ் சினிமாவில் கடந்த 2019 மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மதராசபட்டினம். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்க அவருக்கு ஜோடியாக இங்கிலாந்து நாட்டின் மாடல் அழகியாக இருந்து வந்த ஏமி ஜாக்சன் இந்த திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார். இப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் திரைத்துறையில் அறிமுகமானார் .
இந்த திரைப்படத்தை ஏ. எல் விஜய் இயக்கியிருந்தார். முக்கிய வேடத்தில் நடிகர் நாசர் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன்னுடைய பாடல்களாலும் தன்னுடைய BGM ஆளும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க போராடும் தருணத்தில் மதராசபட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளியான ஆர்யா அவரது வீர தீர செயல்களையும் நற்குணங்களையும் பார்த்து அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்ட தடைகளை தாண்டி அந்த காதல் வெற்றி அடைந்ததா என்பதை விவரிக்கப்படும் தான் மதராசபட்டினம் .
1945 காலகட்டத்தில் நடந்த கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பதற்கு இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷிடம் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்த அனுபவத்தை குறித்து கேட்டபோது பூக்கள் பூக்கும் தருணம் மிகப்பெரிய ஹிட் அடித்தற்கு நான் மட்டும் காரணம் இல்லை இயக்குனர் ஏ. எல் விஜய் தான் மிக முக்கிய காரணம் என கூறினார்.
இந்த பாடலுக்கு நான் முதலில் மியூசிக் போட்ட போது மிகவும் வேகமாக சுருதிகளை கொண்டு ராப் பாடல் மாதிரி உருவாகிவிட்டது. அது ரொம்ப பாஸ்டா போயிடுச்சு. நான் போட்ட மியூசிக் இயக்குனர் ஏ. எல் விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இதையும் படியுங்கள்: திருமணத்திற்கு பிறகு வெளிவந்த வரலட்சுமியின் சுயரூபம் – ரொம்ப மோசமா நீ!
என்ன இவ்வளவு பாஸ்டா போகுது … இது ரொம்ப சிம்பிளாக்கி அழகா மைல்டா கொண்டு போலாம் என்று அவர் சொன்ன பிறகுதான் அவரது யோசனை கேட்டு இசையமைக்க இந்த பாடல் மிகவும் அழகாக வந்தது. அதன் பிறகு இந்த பாடல் சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. எனவே அந்த பாடலின் வெற்றிக்கு காரணம் ஏ. எல் விஜய் தான் என ஜிவி பிரகாஷ் பெருமதத்தோடு கூறினார். இன்று வரை பூக்கள் பூக்கும் தருணம் பலரது ஃபேவரைட் பாடல் லிஸ்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.