இந்தா பீடி, சிக்ரெட் பிடிக்க வச்சிக்கோ… பணம் கொடுத்து அசிங்கப்படுத்திய வடிவேலு – சாம்ராஜ்யத்தையே அழித்த ராஜ்கிரண்!

Author: Shree
20 June 2023, 12:08 pm

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

vadivelu - updatenews360

அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.

rajkiran-updatenews360

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் வடிவேலு தன்னை வளர்த்துவிட்ட நடிகர் ராஜ்கிரண் சினிமாவில் சறுக்கலை சந்தித்தபோது அவருக்கு பணம் கொடுத்து உதவியதை பேட்டி ஒன்றில், ” ராஜ்கிரண் ரொம்ப மோசமான நிலைக்கு போய்ட்டாரு. நான் தான் ரூ. 25 ஆயிரம் கொடுத்து இந்தா பீடி, சிக்ரெட் பிடிக்க வச்சிக்கோன்னு சொன்னேன் என்று மிகவும் திமிர் மற்றும் தெனாவட்டாக தான் பெரிய வள்ளல் மாதிரி பேசினார். அதை அறிந்த ராஜ்கிரண் அன்றிலிருந்து வடிவேலுவின் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை. சொல்லப்போனால் வடிவேலுவின் சாம்ராஜ்யம் அன்றிலிருந்து தான் அழியத்துவங்கியது என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 2856

    148

    31